Saturday, December 26, 2009

கண்ணீர்..... கண்ணீர்.........

கண்ணீரை நன் ரசித்தேன்

எனக்காக அவள் அழும் போது

அதே கண்ணீரை நன் வெறுக்கிறேன்

என்னைபிரிந்து அழவைக்கும் போது..........

காதல் கிறுக்கன்........

நீ என்ன லூசா??"

கழுத்தை சாய்த்து

பார்வை இறக்கி

நீ கேட்கும்

அழகுக்காகவே

பைத்தியமாகலாமடி

என்று எண்ணி உன் பின்னே

வந்தேனடி என் பிரியசகியே.......

கல்லூரியில் அவளை கண்ட மட்டமான நினைவு.......

கல்லூரியில் நடக்கையில்
எதிர்வரும் உன்னை
விழிகள் தீண்டுகின்றன!

பார்வை பரிமாற்றங்கள்
நடந்த பின்னும்
ஒன்றுமறிதவளாய் நீ செல்கிறாய்!

கடந்த காலத்தின்
காதல் நினைவுகளை
கடந்து நானும் செல்கிறேன்!

காதலித்து பார் நிகழ்வதை........


முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா?


அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ?


அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ?


அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”


காதலை மானசீகமாய் நட்பாக்க முயன்றதுண்டா?


நட்பான காதலை மறைக்க முயன்று அவளிடம் கையும் களவுமாக சிக்கியது உண்டா ?

நாளை காதலிக்கவில்லை என்ற நிலையில் அந்த நாளே நினைவில்லாமல் போகும் அளவுக்கு தனிமையில் இருததுவுண்ட?

பல முறை நண்பர்களிடம் அவளை மறந்து விட்டதாக பொய் சொல்லி ஒரு நிமிடத்திற்கு ஒரு முறையாவது அவள் நினைவுகளை கடந்து வருவதுண்டா ?

இல்லை என்றால் கொஞ்சம் காதலித்து பார்.

அவளின் ஞாபகங்கள்

உன்னைப்பற்றியே எப்போதும் மனதில்
நினைத்துக் கொண்டிருந்தேன்.

உன்னோடு சிரித்து பேசியே
என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.

உன்னுடைய வேலையையும்
நானே பார்த்துக்கொண்டேன்.

நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட‌
உன்னோடு இருக்க‌ விரும்பினேன்.

உன்னோடு பிற‌ந்த‌ நாளுக்கு
ப‌ரிசு வாங்க‌ தோழியை அழைத்து சென்றேன்.

கார‌ணமே இல்லாம‌ல் ப‌ல‌முறை
தின‌மும் தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டேன்.

உன் ஆடையையும்
அழகினையும் வ‌ர்ணித்து பேசினேன்.

நீ கேட்காம‌லேயே நான் செய்த‌
சேட்டைக‌ளை உன்னிட‌ம் கூறினேன்.

இவையனைத்தும்
உன்னைக் காதலித்ததால்

இனி என்ன செய்வேன்பிரிவிற்க்கு பின்பு
என் பிரியமானவளே நீயே சொல்லு!!!!!!!!

Friday, December 25, 2009

என் வாழ்வின் நரகம்

ஒவ்வொரு நாளும் உன்னுடைய வீட்டை

கடந்து செல்லும் போது உனது மின் பார்வையில்

இருந்து மீளாமல் செல்ல முடியவில்லை..


ஊரெல்லாம் மின்சார தட்டுப்பாடு...

இவளின் கண்களில் மட்டும் எப்படி

இவ்வளவு பவர்..?

ஐன்ஸ்டீன் வாழும் காலம் நீ இல்லை...

இல்லை என்றால் மின்சாரம் கண்டுபிடிக்காமல்

போய் இருக்க கூடும்...

ஒரு கண்களால் என்னை பார்க்கும் போதே

இப்படி ஆகின்றேனே.. இரண்டு கண்ணால் பார்த்தால்..?


நீ பேசி கேட்டதை விட..உன் கண்கள் பேசி

பார்த்ததே அதிகம் எனக்கு...

உன்னுடன் பேசாத இந்த நாட்கள் என் வாழ்வின் நரகம்

இடியென தாக்கிய காதல் நினைவு

காதலை சொல்லுவதற்க்காக நான் சென்ற

ஒவ்வொரு நாட்களும்

நீ என்னை கொல்லுவதற்காக (உன் பார்வையால்)

வந்தாய் என்பது ஏன் எனக்கு அப்போது

தெரியாமல் போய்விட்டது..?

பல நாட்களுக்கு பிறகு நமது

காதல் கடிதத்தை படிக்கும் போது

சிறு காயம் ஏற்படுத்திவிட்டது..ஒன்றும் இல்லை..

மனதின் வலியில் கொதித்து கொண்டு இருந்த

கண்ணீர் துளி ஒன்று கரம் தொட்டு

சிரித்துவிட்டு சென்றது..

தொலை பேசி உரையாடல்

நீ தொடர்புகொண்டு என்னிடம்

பேசும் போது எல்லாம் நான்

தொடர்பிழந்து நிற்கிறேனே ஏனடி...?

இன்னும் புரியவில்லை காரணம் எனக்கு...!


ஒரு முனையில் நீ..

மறுமுனையில் நான்...

சத்தம் மட்டும் இல்லை...

ஆனால் பேசுகிறோம்..

அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்.

காதல் போர் கோடி

தினம் தினம் கவிதை எழுத ஆசை

ஆனால் எனது சிறு இதயமோ வேண்டாம் என்று

போர் கோடி தூக்குகிறது

இதோ இன்று மட்டும் ஏனோ தெரியவில்லை

எங்கிருந்துதான் வீரம் வந்தது என்று

எழுத ஆரம்பித்தேன் உன்னை பற்றி


எழுதினேன் உன்னை பற்றி மட்டுமே

என் மீது கோவம் கொண்டுள்ள என் தோழியே

இதை நன் யாரிடம் போய் சொல்லுவேன்!!!

என் காதல் புதியது!!!

நாளுக்கு இரவும் பகலும் புதிதல்ல

வானிற்கு மழையும் வெயிலும் புதிதல்ல

மழைக்கு இடியும் மேகமும் புதிதல்ல

எதற்கும் அசைந்து கொடுக்காத என் மனம்

உன்னைகண்டு சில நிமிடம் சிலையானது புதிது

உன் வருகைக்காக காத்திருப்பது புதியது

கணக்கு எழுதிய என் கை விரல்கள்

இன்று காதல் கடிதம் எழுதுவது புதியது

முற்றிலும் புதியது புதியது!!

என் இதயத்தில் ஓட்டையா?

மருத்துவ அறிக்கை சொன்னது

என் இதயத்தில் ஒட்டியம்

மன அறிக்கை சொன்னது

என் இதயம் தொலைந்து

பல மதங்கள் ஆயின என்று

இது எனக்கு தேவை தான்

காதல் கண்களில் துவங்குகிறது
காகிதத்தில் எழுதப் படுகிறது

கருத்தில் விதைக்கப் படுகிறது
கடைசியில் மரணத்தில் முடிகிறது

தேவையா இந்த காதல்
தினமும் அவளை சந்தித்த போது

இதனை ஏனோ என் மனம் சிந்திக்க மறுத்தது.....

அவள் என்னை வெறுத்தாலும் அவளே ஜெயம்

அழ வைப்பது அவள் என்று தெரிந்தும்

அடம் பிடிக்கிறது என் கண்கள்

அவளை தான் காணவேண்டும் என்று

இதுவும் காதல் தான்....

அவளை முதலில் பார்த்தபோது பரவசமடைந்தேன்....
ஆனால் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை....

அவள் அழகானவள் உண்மை....
ஆனால் தேவதை என்னும் அளவுக்கு இல்லை....

அவள் அருகில் இல்லாதபோது தவித்தேன்....
ஆனால் நிமிடங்கள் வருடங்களாகுவதில்லை....

அவள் பிரிந்தபோது தவித்தேன்....
ஆனால் உயிர் நீக்க துணியவில்லை....

நம்பினால் நம்புங்கள்.... என் காதல் உண்மையானது....
புனிதமானது....

Thursday, December 24, 2009

கருப்பு நிறம்

தோல் தேய்த்து போகும் வரை

கழுவுகிறேன்

சபை முன்னே சரில்லாத என்

கருப்பு நிறத்தை..........

ஒவ்வொரு முறை

ஒவ்வொரு முறை என்னை கடந்து செல்லும் போது
என்னிடம் கலவாடி செல்கிறாள்
பணத்தை அல்ல என் மனதை

என் உயிர் தோழனிடம் முறையிட்டேன்,
அவளை கண்டுபிடிக்க வேண்டும் என்று
தண்டிபதற்க்கு அல்ல சொந்தமாக்குவதர்க்கா

என் உயிர் மறைந்தாலும் என் பிரியமான அவளை
மறக்க மாட்டான் இந்த மாறன்