Friday, December 24, 2010

பிறந்த நாள் கொண்டாட்டம்


அன்புள்ள நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு என்னோட ப்லோக்க்கு இன்னைக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்றவங்க சொல்லலாம் இல்ல அட பாவி ஒரு வருஷமா கவிதை என்ற பேருல மொக்கை போட்டு என்னகள சாவடிக்குறயனு திட்டுறவங்க திட்டலாம். அறிமுகம் இல்லாமல் புதிதாக கிடைத்த நண்பர்கள் கவலைகளை கூட காமெடியாக மாற்றக்கூடிய நல்ல நண்பர்களை குடுத்த பதிவுலகத்திற்கு என்றும் என் நன்றிகள் . யாரும் கேக் சாப்பிடாம போககூடாது இந்தாங்க எடுத்துகோங்க.

இதோடு மற்றும் ஒரு செய்தி இனி இந்த வலைதளத்தை நிலா ரசிகன் என மாற்ற உள்ளேன் காரணம் கேட்க்க கூடாது. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் சத்தியமா நான் இன்னும் யாரையும் காதலிக்கலா ஏன யாரும் என்ன காதலிக்கலா இத வலைடளைதில் வரும் கவிதைகள் அனைத்தும் சும்மா பொழுது போக்குக்க எழுதுனது மற்றபடி வேற ஒன்னும் இல்ல. எனக்கும் காதல தவிர வேற ஒன்னும் எழுத தெரியல என்பதே உண்மை.

Friday, December 17, 2010

நிலவின் மீது காதல்


தினமும் தேய்ந்து தேய்ந்து

மறைவது நிலவின் இயல்பு

நிலா என்பது உன் புனை பெயர்

நிலவின் குணம் மறைவது மட்டுமல்ல

என்றாவது மீண்டும் வளரும்உன்மனதில் தேய் பிறையான என் நினைவு

என்று தான் வளர் பிறையாக மாறும்

நிலவே உன் மனதில் அமாவாசையான

என் நினைவு பௌர்ணமி நிலவாக என்று வட்டமிடும்

Tuesday, November 2, 2010

பிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை

காதல் மிகவும் இனிமையானது என உணர்ந்தேன்

அவள் மேல் நான் காதல் கொண்ட போது

காதல் மிகவும் கொடியது என அறிந்தேன்

அவள் என் காதலை கொன்ற போது


கடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்

அவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே

அது அவள் நானாகவும் நான் அவளாகவும்

பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு

காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்

Monday, October 4, 2010

காதலில் ரகசியம்

அவள் அழகின் ரகசியம்

என்னிடம் அழகு இல்லாததுதான்
என் அன்பின் ரகசியம்

அதை உணர அவளிடம் இதயம் இல்லாததுதான்

அவள் வெற்றியின் ரகசியம்

அவள் பின்னல் நான்

என் தோல்வியின் ரகசியம்

என் முன்னால் அவள்.

Saturday, September 18, 2010

காதலில் சுமையான நினைவுகள்

பெண்ணே என் இதயத்தில் உன்


நினைவு மட்டுமே இது வரமா! சாபமா!


அன்று சுகமாக சுமந்துவந்த உன் நினைவுகள்


இன்று சுமையானதே இது ஏன்?


அலை மீதோ படகு தடுமாறுது


என் கல் நெஞ்சமோ இன்று பஞ்சானது


இந்த பூமியோ இடம் மாறி போவதில்லை


அந்த வானமோ தடம் மாறி போவதில்லை


உன் நினைவில் மட்டும் தடுமாற்றம் ஏன்?


விடை சொல்லி விட்டு செல்வாயா?


கடைசிவரை காத்திருப்பேன் உன் நினைவுடன் மட்டுமேTuesday, August 24, 2010

பெண்ணே நீ தோழியா காதலியா

பெண்ணே உன் மௌனத்தின் காரணமாக

உன்னுடன் மட்டும் பேச வேண்டும் என்னும் உணர்வு

இது ஒரு இனம் புரியாத உணர்வு

இது காதல் என்றால் நீ என் காதலி

இல்லை நட்பு என்றால் நீ என் தோழி 


பெண்ணே நீ தோழியா காதலியா


விடை தேடி அலைகிறேன் வீதியிலே 
Friday, August 13, 2010

விதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்

கனவில் மட்டும் காதல்
கண்ணீர்த்துளிகளில் மட்டுமே வாழ்க்கை
வலிக்கும் நினைவுகள்
வீணாகும் வாழ்க்கை
கௌரவம் என சொல்லும் உந்தன் மனம்
கவலையில் வாடும் எந்தன் மனம்
விடை தெரியாத என் காதல் பயணம்
விதியின் பாதையிலே...............

Saturday, July 31, 2010

இன்றைய காதல் vs உண்மை காதல்


முதல் நாள் சாலையில் பார்கிறான்
மறுநாள் பின் தொடருகிறான்


அடுத்தநாள் அவனும் சிரிக்கிறான்
அவளும் சிரிக்கிறாள் காதல் மலந்தது
முப்பது நாளுக்கு பிறகும் இது தொடர்கிறது

அவன் மற்றொரு பெண்ணின் பின்னால்
அவள் இன்னொரு ஆணின் முன்னாள்

இதுதான் காதலா? அப்படி என்றால்
இன்னும் சில உண்மை காதல் ஊமையாகதான்
இருக்கிறது அதில் விழிகள் மட்டுமே பேசுகிறது
இதழ்கள் இன்னும் மௌனமாகவே உள்ளது

இதில் எது காதல் குழப்பத்தில் நான்


Friday, July 16, 2010

காதல் கவிதை மாதிரி: பிரிவின் வலி

உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் வலிக்குதடி- அந்த 
நேரமும் உன் நினைவுகள் மட்டும் தோன்றுவதால்
உன்னை மறந்துவிட்டேன் என்று நெருங்கிய
நண்பர்களிடமும் பொய் சொல்லிவிட்டு மனதில்
உன்னை மட்டுமே நினைக்கும் வலியை
உணர்த்த தமிழில் வார்த்தையே இல்லைSaturday, July 10, 2010

மரணமே பெண்ணின் வடிவில் உன்னை நேசிக்கிறேன்

மரணமே உன்னை நான் நேசித்தேன்
பெண்ணின் வடிவில் மறந்துவிடாதே
உனக்கும் ஒரு நாள் மரணம் வரும்
ஒரு பெண்ணை உண்மையாக நேசித்தால்

பெண்ணே ரசிகனாக இருந்த நான்
உணர்ச்சி இல்லாதவனனேன் உன்னால்
பனித்துளியாய் இருந்த என் மனம்
எரிமலையாய் வெடிதத்தடி
போராளியாய் இருந்த என்னை இன்று
கோமாளியாக்கி விட்டாய்
கவிதையை கிறுக்கும் கிறுக்கனாக மாறி விட்டேன்
வானவில்லை ரசித்த நான்
வெறும் பையன் என்ற பெயரின் சுற்றிவருகிறேன்

(எப்படியாவது எனக்கு பிடித்த பக்ககளை இந்த கிறுக்கலில் கொண்டுவர எண்ணினேன் சில  நண்பர்களின் பக்கங்களை கொண்டுவர முடியவில்லை அதக்கு வருந்துகிறேன்
அவகளின் பக்கங்கள்
சந்ருவின் பக்கம்
மதுரை சரவணன்
வானம் வெளித்த பின்னும் 
FEROS: பெரோஸ்
இது கொஞ்சம் வருத்தம் தருகிறது)
 இது இருக்கட்டு மறக்காமல் வோட்டு போடுக


Friday, July 9, 2010

முட்கள் நிறைந்தது என் காதல் பயணம்

என் காதல் பயணம் முட்கள் நிறைந்தது
அந்த பயணத்தில் முள்
தைத்தது என் காலில் அல்ல
என் இதயத்தில்
பெண்ணே பிறப்பு ஒரு முறை
இறப்பு ஒருமுறை என்று யார் சொன்னது
பெண்ணே நீ என்னை விரும்பும்
நிலையில் நான் பிறக்கிறேன்
அதே போல் நீ என்னை வெறுத்தால்
அந்த கணம் இறக்கிறேன்

( இப்பொழுது தெரிகிறதா நண்பர்களே நான் எத்தனை முறை பிறந்திருப்பேன் எத்தனை முறை இறந்திருப்பேன் என்று ஒரு உண்மை என்னுடைய பிறப்பைவிட இறப்பு பல மடங்கு அதிகம். சரி இது இது இருக்கட்டும்  முதலில் தமிளிஷ் , தமிழ்மணம் , தமிழ் 10 இதுல வோட்டு போடுக அப்பறம் கருத்துகளை கீழே போடுங்க வோட்டு மற்றும் கருத்துகளை போடாதவங்களை காதல் பேய் பிடிச்சிடும் பார்த்துகோங்க!!!!!!! )

Tuesday, July 6, 2010

காதல்னா என்ன !

சொர்கத்தின் கதவை திறந்து
நரகத்தை அடையும் ஒரு
உன்னத உணர்வுதான்
இந்த காதல்

காயங்களில் ஆனந்தம்
கொள்ளும் ஒரு பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்
இதில் வெற்றி பெரியதல்ல ஆனால்
தோல்வி மிகவும் கொடியது

Saturday, July 3, 2010

விடை தெரியாத என் காதல் பயணம்

உலகில் எத்தனையோ பெண்
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலந்தது

அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை


பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்

அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன

விடை தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை

Thursday, July 1, 2010

தொடர் கதை தான் என் (தோற்றுப்போன ) காதல்

இன்று எதோ ஒரு தைரியத்தை வரவைத்து
அவளிடம் சென்று பேசினேன்
அவள் முன் தனியே பேசினேன் நான்
அவளோ கண்டுகொள்ளவில்லை
எனக்கோ எதுவும் புரியவில்லை
வார்த்தையின் ஓசை குறைந்தது
இதயமோ வலி கண்டது
என்னனை தாண்டியே சென்றால்
என் வார்த்தைகள் எதுவும் அறியாததை போல்
சுற்றி இருந்தவர் அனைவரும் சிரித்தனர்
என் மனமோ யாருக்கும் தெரியாமல் அழுதது
எனக்கோ இது புதிதல்ல
என் வாழ்வில் தினமும்
நடக்கும் தொடர் கதை இது
இதை முடிப்பது எப்படி என்று
தெரியாமல் தவிக்கிறேன் நான்


Wednesday, June 30, 2010

வலிகள் நிறைந்த என்காதல்

தமிழில் புதிய எழுத்துகளை

கண்டுபிடித்தால் சொல்லுங்கள்

அதில் தேடலாம்

என் காதலின் புனிதத்தை

சொல்லும் வார்த்தைகளை...


அவள் மேல் நான் அப்படி

ஒரு காதல் செய்தோம்.


ஆனால் இப்போது

எல்லாமும் முடிந்து போயிருந்தது

என் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.


அதில் நான் வடித்த

கண்ணீர் துளிகள்

ஒரு கடலையே உருவாக்கியதுஎந்த அளவுக்கு 'வழியவழிய'

காதலித்தேனோ

அந்த அளவுக்கு

'வலிக்க வலிக்க' ரணங்களையும்

கொடுத்து விட்டு போனாள் அவள் .


எல்லாமும் முடிந்து போயிருந்தது.


இப்போதும் கூட

தினமும் கல்லூரியில் பார்க்கிறேன்


எதுவும் நடக்காதது போல
செல்கிறாள் அவள்

எதுவும் அறியாதவனாய் செல்கிறேன் நான்Monday, June 28, 2010

அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்

நீ முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கிவிடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்கவந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்த்தும்
சிலையாக நின்றுவிடுகிறேன்
அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்
கரணம் அன்று முடி இன்று நான்....................

Saturday, June 26, 2010

ஒரு முள்ளின் (என்) காதல்

ஒரே செடியில் தானே பிறந்தோம்
இருபினும் நீன் மட்டும் மலராகவும்
நான் ஏன் முள்ளகவும் பிறக்க வேண்டும்
இது யாரின் செயல்
உன்மேல் உள்ள பனித்துளியை அனைவரும்
ரசிப்பர் ஆனால் யாருக்கும் தெரியவில்லை
அது என் கண்ணீர் துளி என்று

( இதில் மலர் என்பது என் அவள் முள்ளாக இருப்பது நான்)


Wednesday, June 23, 2010

என்ன செய்வது என தெரியவில்லை காரணம் உன் மௌனம்

நினைத்து கூட பார்கவில்லை
நீயும் நானும் காதலர் ஆவோம் என்று

சுதந்திரமாய் திரிந்த என்னை இன்று
சூழ்நிலை கைதியக்கிவிட்டாய் நீ

சில நாள்களாக நீ என்னை தவிர்பதாக
உணர்ந்து தவித்து போகிறேன்

எதை நினைப்பது எதை மறைப்பது எதை முடிப்பது
எதுவும் தெரியவில்லை எனக்கு

முதல் இடம் போய்
பத்தாவது இடம் கிடைத்தது படிப்பில்

முதல் மரியாதையை போய்
அவ மரியாதை நடக்கிறது என் வீட்டில்

என்ன செய்வது என தெரியவில்லை
காரணம் உன் மௌனம்...............Monday, May 31, 2010

கல்லறையில் காதல்

காதல் செய்தபோது மலர் கொடுத்தேன்

அந்த அழகிய மலருக்கு

ஏற்க்க மறுத்தால் பாவம்

கடைசியில் என்னை தேடி வந்தால்


கையில் மலரோடும் கண்ணில் கண்ணீரோடும்

என்னால் மலரையும் வாங்க இயல வில்லை

அவள் கண்ணீரையும் துடைக்க இயலவில்லை

காரணம் கல்லறையில் நான் அவள் நினைவுகளோடு மட்டும்...........


Saturday, May 15, 2010

காதலுக்கு என்னால் முடித்த சிறு ஐடியா

சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.


ஆனால் காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.


உங்கள் காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான் நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.


அவரும் நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும் உண்டு.

கல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும்.


உங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.


சாதாரண நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.


சரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல் ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி கப் தான் கையில் மிஞ்சும்.

Cine Actor & Actress Images

Saturday, April 24, 2010

அது ஒரு கடினமான நேரம்...பிரிவின் வலியை உணர்ந்தவர்களை
போய் கேளுங்கள்
அவர்கள் சொல்வார்கள்
பிரிவு தரும் ரணமான நேரங்களை...

யாராலும் தாங்கிக் கொள்ள
முடியாது தான்.

நான் இதுவரை காதலின் பிரிவை
சந்தித்ததே இல்லை.

ஏனென்றால் எனக்கு இதுதான்
முதல் காதலாக அகப்பட்டது.

அவளும் நானும் அப்படி
ஒரு காதல் செய்தோம்.

தமிழில் புதிய எழுத்துகளை
கண்டுபிடித்தால் சொல்லுங்கள்
அதில் தேடலாம்
எங்கள் காதலின் புனிதத்தை
சொல்லும் வார்த்தைகளை...

அவளும் நானும் அப்படி
ஒரு காதல் செய்தோம்.

ஆனால் இப்போது
எல்லாமும் முடிந்து போயிருந்தது
என் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.

அதில் நான் வடித்த
கண்ணீர் துளிகளில்
உள்ள உப்புத்துகள்கள்
நிரம்பி கிடக்கின்றன.

எந்த அளவுக்கு 'வழியவழிய'
காதலித்தாலோ
அந்த அளவுக்கு
'வலிக்க வலிக்க' ரணங்களையும்
கொடுத்து விட்டு போனாள்.

எல்லாமும் முடிந்து போயிருந்தது.

இப்போதும் கூட
தினமும் பார்க்கிறேன்

எதுவும் நடக்காதது போல...
இன்னமும் அவள் என்னை
தாண்டித்தான் செல்கிறாள். 
Cine Actor & Actress Images

Wednesday, April 21, 2010

கண்ணீர் விடும் என் இதயம்

நான் காதல்
கொண்டபோது
வேப்பஞ் சாறும்
இனித்தது
காதலி காதலை
கொன்ற கணத்தில்
தேனும் கசந்தது

உனக்காக நான்
துடிக்கிறேன்
ஆனால் நீயோ
என்னைத் தவிர
யார் யாரையோ
நினைக்கிறாய்..
இப்படிக்கு,
கண்ணீர் விடும் என் இதயம்

ஓஹோ இதுதான் காதலோ

நேற்று வரை
அவளிடம் பேச
பயந்த எனக்கு,
இன்றெப்படி வந்தது
தைரியம்!
அவளுக்கு திருமண
வாழ்த்துச் சொல்ல...?

ஓஹோ இதுதான் காதலோ
Cine Actor & Actress Images

அவளின் பார்வை

தவிர்த்தலுக்கென்றே
ஒரு பார்வை
வைத்திருக்கிறாய்-நீ
தவிப்பதற்கென்றே
ஒரு இதயம்
வைத்திருக்கிறேன் நான்.
Cine Actor & Actress Images

Monday, April 19, 2010

காதலை சொன்ன பின்பு வந்த தவிப்பு

* னக்கு

தெரியாமலேயே...

போவதில்

என்ன பயன்

உன்னை உருக உருக

காதலித்து...

* உன்னை காதலிக்க

நினைத்த போதே...

என் மிதமிஞ்சிய ஆசைகளை

பூட்டி வைத்து விட்டேன்

ஏனென்றால்

என்னை இழக்க

என் வீட்டார் தயாரில்லை

* நீ தலை குனிந்து

போகும் போதெல்லாம்

என்னை பார்த்து

நமட்டுச் சிரிப்பு

சிரிக்கிறது

உன் தலையில் இருக்கும்

பூ...

* சொல்லாமல் இருந்திருக்கலாம்

சொன்னதால்

வேண்டாம் என்று

சொல்லி விட்டாய்.. 
Cine Actor & Actress Images

Friday, April 16, 2010

என் காதல் கவிதை

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்  
முனிவருக்கு  கடவுள் மேல் இருப்பது  பக்தி எனக்கு  அவள் மேல் இறுப்பது  காதல் அவளுக்கு  என்மேல் இறுப்பது  வீண் கோபம்விட்டு விடு கோவத்தைஇல்லை  விட்டு விடுவேன் என் உயிரை

Tuesday, April 6, 2010

என்னவளின் அழகு

என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று
விடுகிறாய்?’ என்றா
கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு
பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!

ஊமை காதல்

அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய் 
 

காதல் கவிதை

எல்லா காதல்பாடல்களும்
உன்னைப்பற்றியே
எழுதப்பட்டிருப்பதாக
தோன்றுகிறது
எனக்கு.. 
 
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப்பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னைப் மாதிரி இல்லையே

உன்னைப்பற்றிக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்
நீயே கவிதையென்பதை உணராமல்

காதல் கவிதை

எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்…?

பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு.

போதும்

காதல் கவிதை

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே
ஒரு வைரம் உருவாக.
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில் உருவானாய்?

காதல் கவிதை

அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால், நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான்
இருக்கிறது.

என் காதல் அழுகிற குழந்தை மாதிரி

துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு


உன்னை ஏன்
இப்படி கதலித்துத்தொலைக்கிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி

காதலின் பிரிவு

பயணம் முடிந்ததும்

நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு

வீதியிய் புலம்பிக்கொண்டிருந்தது

பயணம் முடிந்துவிட்டதை நினைத்து

என்னை போல

அழகு

சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்.

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
 
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

Wednesday, March 17, 2010

ஊமை காதலன்

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னை காட்டி
என்னிடம் கேட்கிறது…
‘ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது?’ என்று! 
 
அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மெளனத்தையும்
நீதான் எனக்குத் தந்தாய்.

அதிர்கிறதே என் இதயம்

சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம்போல்
இன்னும் அதிர்கிறதே
என் இதயம்

காதல் கவிதை

என்னுடையது என்றுதான்
இதுவரை நினைத்திருந்தேன்

ஆனால்
முதன்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி போல
உன்பின்னால் ஓடுகிறதே
இந்த இதயம்............


புத்தர் இந்த உலகத்தில்
தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்
அமைத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்தாய்.

இப்படியும் சமாளிப்போம்

நான்
உன்னைக் காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது
இப்படியும் சமாளிப்போம்.........

Friday, February 19, 2010

காதலின் விளையாட்டு

பசிக்கும் பருவம் இது
ஆனால் பசியோ எடுப்பது இல்லை.
ரசிக்கும் கண்கள் இங்கே
ஆனால் அவளோ என் கண்ணுள்

பல மணி நேரம் பேசினேன்
பேசியது நினைவில் இல்லை.
பல மணி நேரம் தூங்கினேன்
அவளோ என் கண்ணுள்ளே.

குடித்தேன் வெறித்தேன்
அவளை மறக்க முடியவில்லை
விலகினேன் வெறுத்தேன்
அப்போதும் முடியவில்லை.

ஏன் இந்த விளையாட்டு!
எல்லாம் விதியின் விளையாட்டா?
இல்லை
எல்லாம் காதலின் விளையாட்டா!?

Tuesday, January 19, 2010

காதல்

மனதிற்குள் வந்த வலியே

மனைவி ஆகும் சகியே

மறப்பேன் நான் என்னையே

மணப்பேன் நான் உன்னையே 

Tuesday, January 12, 2010

அழ வைப்பவள் அவள்

அழ வைப்பவள்

அவள் என்று தெரிந்தும்

அடம் பிடிக்கிறது  என் கண்கள்

அவளைதான் காணவேண்டும் என்று..........

தேவையா இந்த காதல்

காதல் கண்களில் துவங்குகிறது

காகிதத்தில் எழுதப்படுகிறது

கருத்தில் விதைக்கப் படுகிறது

கனவுகளில் வழக்கப் படுகிறது

கற்பில் சலனப்படுகிறது

கடைசியில் மரணத்தில் முடிகிறது

தேவையா இந்த காதல்

தினம் அவளை சந்தித்த வேளையில்

மட்டும் இதை சிந்திக்க மறந்தேன்...........