பிரிவின் வலியை உணர்ந்தவர்களை
போய் கேளுங்கள்
அவர்கள் சொல்வார்கள்
பிரிவு தரும் ரணமான நேரங்களை...
யாராலும் தாங்கிக் கொள்ள
முடியாது தான்.
நான் இதுவரை காதலின் பிரிவை
சந்தித்ததே இல்லை.
ஏனென்றால் எனக்கு இதுதான்
முதல் காதலாக அகப்பட்டது.
அவளும் நானும் அப்படி
ஒரு காதல் செய்தோம்.
தமிழில் புதிய எழுத்துகளை
கண்டுபிடித்தால் சொல்லுங்கள்
அதில் தேடலாம்
எங்கள் காதலின் புனிதத்தை
சொல்லும் வார்த்தைகளை...
அவளும் நானும் அப்படி
ஒரு காதல் செய்தோம்.
ஆனால் இப்போது
எல்லாமும் முடிந்து போயிருந்தது
என் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.
அதில் நான் வடித்த
கண்ணீர் துளிகளில்
உள்ள உப்புத்துகள்கள்
நிரம்பி கிடக்கின்றன.
எந்த அளவுக்கு 'வழியவழிய'
காதலித்தாலோ
அந்த அளவுக்கு
'வலிக்க வலிக்க' ரணங்களையும்
கொடுத்து விட்டு போனாள்.
எல்லாமும் முடிந்து போயிருந்தது.
இப்போதும் கூட
தினமும் பார்க்கிறேன்
எதுவும் நடக்காதது போல...
இன்னமும் அவள் என்னை
தாண்டித்தான் செல்கிறாள்.
Cine Actor & Actress Images