Saturday, July 31, 2010

இன்றைய காதல் vs உண்மை காதல்


முதல் நாள் சாலையில் பார்கிறான்
மறுநாள் பின் தொடருகிறான்


அடுத்தநாள் அவனும் சிரிக்கிறான்
அவளும் சிரிக்கிறாள் காதல் மலந்தது
முப்பது நாளுக்கு பிறகும் இது தொடர்கிறது

அவன் மற்றொரு பெண்ணின் பின்னால்
அவள் இன்னொரு ஆணின் முன்னாள்

இதுதான் காதலா? அப்படி என்றால்
இன்னும் சில உண்மை காதல் ஊமையாகதான்
இருக்கிறது அதில் விழிகள் மட்டுமே பேசுகிறது
இதழ்கள் இன்னும் மௌனமாகவே உள்ளது

இதில் எது காதல் குழப்பத்தில் நான்


Friday, July 16, 2010

காதல் கவிதை மாதிரி: பிரிவின் வலி

உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் வலிக்குதடி- அந்த 
நேரமும் உன் நினைவுகள் மட்டும் தோன்றுவதால்
உன்னை மறந்துவிட்டேன் என்று நெருங்கிய
நண்பர்களிடமும் பொய் சொல்லிவிட்டு மனதில்
உன்னை மட்டுமே நினைக்கும் வலியை
உணர்த்த தமிழில் வார்த்தையே இல்லைSaturday, July 10, 2010

மரணமே பெண்ணின் வடிவில் உன்னை நேசிக்கிறேன்

மரணமே உன்னை நான் நேசித்தேன்
பெண்ணின் வடிவில் மறந்துவிடாதே
உனக்கும் ஒரு நாள் மரணம் வரும்
ஒரு பெண்ணை உண்மையாக நேசித்தால்

பெண்ணே ரசிகனாக இருந்த நான்
உணர்ச்சி இல்லாதவனனேன் உன்னால்
பனித்துளியாய் இருந்த என் மனம்
எரிமலையாய் வெடிதத்தடி
போராளியாய் இருந்த என்னை இன்று
கோமாளியாக்கி விட்டாய்
கவிதையை கிறுக்கும் கிறுக்கனாக மாறி விட்டேன்
வானவில்லை ரசித்த நான்
வெறும் பையன் என்ற பெயரின் சுற்றிவருகிறேன்

(எப்படியாவது எனக்கு பிடித்த பக்ககளை இந்த கிறுக்கலில் கொண்டுவர எண்ணினேன் சில  நண்பர்களின் பக்கங்களை கொண்டுவர முடியவில்லை அதக்கு வருந்துகிறேன்
அவகளின் பக்கங்கள்
சந்ருவின் பக்கம்
மதுரை சரவணன்
வானம் வெளித்த பின்னும் 
FEROS: பெரோஸ்
இது கொஞ்சம் வருத்தம் தருகிறது)
 இது இருக்கட்டு மறக்காமல் வோட்டு போடுக


Friday, July 9, 2010

முட்கள் நிறைந்தது என் காதல் பயணம்

என் காதல் பயணம் முட்கள் நிறைந்தது
அந்த பயணத்தில் முள்
தைத்தது என் காலில் அல்ல
என் இதயத்தில்
பெண்ணே பிறப்பு ஒரு முறை
இறப்பு ஒருமுறை என்று யார் சொன்னது
பெண்ணே நீ என்னை விரும்பும்
நிலையில் நான் பிறக்கிறேன்
அதே போல் நீ என்னை வெறுத்தால்
அந்த கணம் இறக்கிறேன்

( இப்பொழுது தெரிகிறதா நண்பர்களே நான் எத்தனை முறை பிறந்திருப்பேன் எத்தனை முறை இறந்திருப்பேன் என்று ஒரு உண்மை என்னுடைய பிறப்பைவிட இறப்பு பல மடங்கு அதிகம். சரி இது இது இருக்கட்டும்  முதலில் தமிளிஷ் , தமிழ்மணம் , தமிழ் 10 இதுல வோட்டு போடுக அப்பறம் கருத்துகளை கீழே போடுங்க வோட்டு மற்றும் கருத்துகளை போடாதவங்களை காதல் பேய் பிடிச்சிடும் பார்த்துகோங்க!!!!!!! )

Tuesday, July 6, 2010

காதல்னா என்ன !

சொர்கத்தின் கதவை திறந்து
நரகத்தை அடையும் ஒரு
உன்னத உணர்வுதான்
இந்த காதல்

காயங்களில் ஆனந்தம்
கொள்ளும் ஒரு பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்
இதில் வெற்றி பெரியதல்ல ஆனால்
தோல்வி மிகவும் கொடியது

Saturday, July 3, 2010

விடை தெரியாத என் காதல் பயணம்

உலகில் எத்தனையோ பெண்
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலந்தது

அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை


பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்

அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன

விடை தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை

Thursday, July 1, 2010

தொடர் கதை தான் என் (தோற்றுப்போன ) காதல்

இன்று எதோ ஒரு தைரியத்தை வரவைத்து
அவளிடம் சென்று பேசினேன்
அவள் முன் தனியே பேசினேன் நான்
அவளோ கண்டுகொள்ளவில்லை
எனக்கோ எதுவும் புரியவில்லை
வார்த்தையின் ஓசை குறைந்தது
இதயமோ வலி கண்டது
என்னனை தாண்டியே சென்றால்
என் வார்த்தைகள் எதுவும் அறியாததை போல்
சுற்றி இருந்தவர் அனைவரும் சிரித்தனர்
என் மனமோ யாருக்கும் தெரியாமல் அழுதது
எனக்கோ இது புதிதல்ல
என் வாழ்வில் தினமும்
நடக்கும் தொடர் கதை இது
இதை முடிப்பது எப்படி என்று
தெரியாமல் தவிக்கிறேன் நான்