|
---|
நினைவு மட்டுமே இது வரமா! சாபமா!
அன்று சுகமாக சுமந்துவந்த உன் நினைவுகள்
இன்று சுமையானதே இது ஏன்?
அலை மீதோ படகு தடுமாறுது
என் கல் நெஞ்சமோ இன்று பஞ்சானது
இந்த பூமியோ இடம் மாறி போவதில்லை
அந்த வானமோ தடம் மாறி போவதில்லை
உன் நினைவில் மட்டும் தடுமாற்றம் ஏன்?
விடை சொல்லி விட்டு செல்வாயா?
கடைசிவரை காத்திருப்பேன் உன் நினைவுடன் மட்டுமே
8 comments:
நல்ல கவிதை அப்படி என்ன சோகம்
காதல் தோல்வி யோ
//உன் நினைவில் மட்டும் தடுமாற்றம் ஏன்?
விடை சொல்லி விட்டு செல்வாயா?
//
அப்படியா ..? எல்லா நேரங்களிலும் தூக்க கலக்கத்துல இருந்தா இப்படித்தான் ஆகும் ..நான் பரிட்சைலையே விடை சொல்ல மாட்டேன் .. இதுக்கு எப்படி பதில் சொல்லுறது..!!
கடைசிவரை காத்திருப்பேன் உன் நினைவுடன் மட்டுமே//
நல்லா இருக்கு அந்த அம்மா ஏன் அவன் இதயத்தை அப்படி எடுத்து வைத்து இருக்கு
மிகவும் உருக்கமாக் இருக்கிறது. நம்பிக்கையுடன் காத்திருங்கள் நல்லது நடக்க வேண்டுமென.
wow.....
அன்பின் ஜெயமாறா
காதக்ல் தோல்வியா - கவலை வேண்டாம் - இதெல்லாம் இவ்வயதில் சகஜம்.
வெற்றி பெற நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நண்பா காதல் தோல்வியா? விடுங்க நண்பா இதெல்லாம் இந்த வயசுல சகஜம்... பாத்துக்கலாம்
காத்திருப்பதிலும் ஒரு சுகம் உள்ளது . கவிதை அருமை நண்பரே .
Post a Comment