விடை சொல்லி செல்
என்னுயிர் தோழியே நான் பார்த்த பார்வையை நீ
வேண்டாம் என ஒதுக்கி இருக்கலாம்
என் தொடர்தலை நீ தவிர்த்திருக்கலாம்
எனது கடிதங்களையும் நீ கிளிதிருக்கலாம்
ஊமையாக இருந்து என் உயிரை
உறிஞ்சுவிட்டாயே என் தோழியே
உன் தாகங்களை தணிக்க
என் இரத்தங்களா தேவை உனக்கு
பெண்ணே என் தோல்விகள்
உனக்கு வெற்றிகளா
என் கண்ணீர் துளிகள்
ஏனோ உனக்கு அமிர்தமாக உள்ளன
நீ என்னை விலகி சென்றது
எனக்கு வருத்தமில்லை
என்னை நேசித்த உன் இதயத்தை
எங்கு ஒலித்து வைத்தாயோ என்பதே
என் வருத்தமாக அமைந்தது
தோழனாக இருப்பதற்கு கூட தகுதி
இல்லாதவனா நான் விடை சொல்லி செல்