ஒவ்வொரு நாளும் நான் உன்வருகைக்காக காத்திருக்கிறேன்
உன்னை கண்டதும் ஒரு நிமிடம் நான் என்னையே மறக்கிறேன்..,
என் காதல் உன்னால் கவிதையானது
அதை நீ வாசித்த நிமிடம் விடுகதையானது...........
என் கவிதைகள் அழகாக இருக்கிறது என்று வர்ணிக்கும் போது
உன்னையே நீ வர்ணிப்பதாக மனம் நினைக்குதடி .............
என் கவிதைக்காக நீ காத்திருக்கிறாய்
நான் உன்னை காதலிப்பதை மறந்து..........