|
---|
நம்ப மறுத்த உண்மை காதல் கவிதை
பெண்ணே உன் வருகைக்காக காத்திருந்தேன் ஆனால்
நான் உனக்காக காத்திருப்பதை ஏனோ நீ
ஒளிந்திருந்து ரசித்தாய் - கடிகார முள் கூட
என் மனதில் காயத்தை ஏற்படுத்தியது உன்னால்.......
நீ என் நெஞ்சில் ஏற்படுத்திய காயத்தை ஏனோ
என் மனம் நம்ப மறுக்கிறது....
காண்பதெல்லாம் வெறும் கனவே - என்ற
கற்பனையில் தான் என் காலமும் நகர்கிறது...
உன்னுடன் வார்த்தை பரிமாற்றம் மட்டும் அல்ல
பார்வை பரிமாற்றமும் தடைபட்டதே - பெண்ணே
உடைக்கபட்ட என் இதயத்தில் உள்ள சிறு சிறு
துண்டுகளும் கண்ணாடிபோல் உன்னையே காட்டுகிறது
காலத்தின் சோதனையால்
என் காதலும் காயமானது
கண்ணீர் துளிகள்
அதில் அமிர்தமானது
4 comments:
ம் ...
வலி தரும் கவிதை வரிகள் அருமை சகோ .மேலும் இனிய கவிதைகள் தொடர வாழ்த்துக்கள் .
உடைக்கபட்ட என் இதயத்தில் உள்ள சிறு சிறு
துண்டுகளும் கண்ணாடிபோல் உன்னையே காட்டுகிறது //
அருமையான வரிகள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
Post a Comment